Monday, June 15, 2009

3G

சென்னையில் பிறந்து வளர்ந்த நீங்கள் ஒரு அலுவல் விஷயமாக கோவைக்கு முதல் முறையாக செல்கிறீர்கள்.

வேலைக்கு பின் மாலை ஆர்.எஸ் புரத்தில் ஷாப்பிங் முடித்து, பக்கத்தில் எந்த நல்ல உணவகம் இருக்கும்

என தேடுகிறீர்கள்.இங்கே உங்களிடம் ஒரு 3G போன் இருந்தால் அது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து

பக்கத்தில் இருக்கும் ஹோட்டல்கள்,அங்கிருக்கும் மெனு கார்டு முதல் நீங்கள் செல்ல விரும்பும் ஹோட்டல்

எவ்வளவு தூரத்தில் இருக்கிறது போன்ற விவரங்களோடு அதற்கு செல்லும் வழியையும் காட்டும்.

நீங்கள் உலாவி(browser) கொண்டு தேடியந்திரம்(search engine) மூலம் தேடத்தேவையில்லை.

3G போனில் அதற்குறிய ஐகான் -யை க்ளிகினால் போதும் பக்கத்தில் இருக்கும் அனைத்து ஹோட்டல்களின்

மேற்சொன்ன விவரங்கள் உங்கள் தொடுதிரையில் கண் சிமிட்டும்.


இது 3G எனப்படுகிற மூன்றாம் தலைமுறை செல்போன்களின் மாயாஜாலங்களில் ஒன்று.


இந்த சேவை ஹோட்டல்களோடு நில்லாமல் மருத்துவமனைகள்,சினிமா தியேட்டர்கள்,பெரோல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வங்கிகள் வரை பொருந்தும்.அவசர மருத்துவ சிகிச்சைக்கு

3G போனில் அதற்குறிய ஐகான் -யை சொடுக்கினால் மிக அருகில் இருக்கும் மருத்துவமனையின் தொலைபேசி எண் முதல் அதற்கான வழித்தடத்தையும் காட்டும்.


நாம் தற்போது பயன்படுத்தும் செல்போன்கள் GSM(Global System for Mobile communications)-எனப்படுகிற இரண்டாம் தலைமுறை 2G தொழில் நுட்ப வகையச் சார்ந்தது.

இதையே சற்று மெருக்கேற்றி இன்டர்நெட் பயன்படுத்த உதவும் GPRS(General packet radio service) எனப்படும் 2.5G தொழில் நுட்பத்தை கொண்டுவந்தார்கள்.


தற்போது அறிமுகப்படுத்தப் படும் 3G, WCDMA(Wide band Code Division Multiple Access) தொழில் நுட்ப வகையைச் சார்ந்தது. GSM 2G-யில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு அலைவரிசையில் ஒரு கால அளவு ஒதுக்கப்படும். 3G WCDMA-வில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதே அலைவரிசையை பயன்படுத்தினாலும் ஒவ்வொரு இலக்கம்(code) ஒதுக்கப்படும்.


டில்லி-யில் MTNL எற்கனவே 3G-யை சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் BSNL கடந்த பிப்ரவரி மாதத்தில் 3G-யை அறிமுகப்படுத்தியது. நோக்கியா,சாம்சங்,மொடோரொலா,சோனி எரிக்சன்,எல்.ஜி போன்ற கம்பனிகள் தற்போது பெருமளவில் 3G போன்களை விற்பனை செய்தாலும், ஆப்பிளின் 3G ஐ-போன் அதனுடைய சிறப்பம்சம்களுக்காக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உங்களது 3G போன், 3G சேவை இல்லாத இடத்தில் 2G தொழில் நுட்பத்தில் வேலை செய்யும்.


3G வழங்கும் மற்றுமொரு வியத்தகு சேவை வீடியோ டெலிபோனி.இனி நண்பர்கள் வீட்டில்

கம்பைன் ஸடடி என பொய் சொல்லி ஊர் சுற்றுவது கடினம்,ஏனென்றால் 3G போனில்

எதிர்முனையில் இருப்பவர்களின் முகத்தையும் சுற்றுபுறத்தையும் கேமரா வழியே பார்த்துக்கொண்டே பேசலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையில்(Live) பார்க்கும் வசதி, FM ரேடியோ,அதி நவீன வீடியோ கேமரா, சினிமா போன்றவற்றை சேமித்து பார்க்கும் வசதி,GPS(Global Positioning System) எனப்படும் வழிகாட்டும் கருவி,14.4 Mbps வேகம் வரை தரவிறக்கம்(download) செய்யும் வசதி(BSNL தற்போது வழங்குவது அதிகபட்சம் 2 Mbps) மிகத்துல்லியமான தொடுதிரை வசதி,பயனாளர்கள் எளிதாக உலாவக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்து மினி கம்ப்யூட்டர் போல் செயல்படும் மூன்றாம் தலைமுறை மொபைல் போன்கள்

மக்களை நிச்சயம் ஈர்க்கும்.


You can see this article in last week's kumudam magazine.

5 comments:

  1. Anonymous4:01 PM

    karunanithi electionku muthal sonnar 3G TNla muthal muthalla arimuka paduhta pattu ullathu endu. appa athuvum pooiya??

    ReplyDelete
  2. நல்லா சொல்றீங்கோ.. டீட்டெய்லு!!
    நானும் 3ஜி போன் வச்சிருக்கேனே..!!

    அருமை, தகவலுக்கு நன்றி!!

    ReplyDelete
  3. பல தகவல்களை சேகரித்து தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  4. கோவையில் 3G மூலம் இணையத்தில் இணைய முடிகிறதா நண்பரே?

    ReplyDelete
  5. I haven't tried it.Not sure who is giving
    3G services now..
    Guys in cbe might have more info..
    Pl let me knw if you knw about this...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz